வீட்டில் இருந்தே ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்க்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
வீட்டில் இருந்தே ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்க்கலாம் - எளிய வழிமுறைகள் இதோ!
வீட்டில் இருந்தே ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்க்கலாம் - எளிய வழிமுறைகள் இதோ!
வீட்டில் இருந்தே ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்க்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

முக்கிய ஆவணங்களில் ஒன்றான குடும்ப ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பதில் இனி சிரமம் வேண்டாம். வீட்டில் இருந்தபடியே குழந்தைகள் பெயரையும், புதிய நபரது பெயரையும் இணைக்க முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு :

ரேஷன் கார்டு மூலமாக அரசின் பல உதவிகளையும், மிகக் குறைந்த விலைக்கு ரேஷன் பொருட்களையும் பெறுவதன் மூலம் பலரும் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இந்த ரேஷன் கார்டு மூலம் அரசு அளித்த உதவி திட்டங்கள் கொரோனா காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதனால் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. மேலும், ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது, குடும்ப ரேஷன் அட்டையில் திருமணத்திற்கு பிறகு புதிதாக இணையும் பெண்ணின் பெயரை புகுந்த வீட்டு அட்டையில் இணைத்தும், அவரது தந்தையின் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்படவும் வேண்டும். குறிப்பாக கணவரின் குடும்ப அட்டையில் சேர்க்கப்படும் போது அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையில் கணவர் பெயர் இருக்க வேண்டும். அதேபோல், திருமணம் ஆன பின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். குழந்தையின் பெயரை சேர்க்க ஆதார் கார்டில் தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

Wipro நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 15% வரைக்கும் சம்பள உயர்வு!

முகவரியையும் மாற்ற வேண்டியிருக்கும். இந்த பெயர் இணைப்பு முறையை இரண்டு வழிகளில் செய்ய முடியும். ஒன்று வீட்டில் அமர்ந்த படியே நீங்கள் புதிய உறுப்பினர் பெயரைச் சேர்க்க முடியும். அதற்கு, உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் (https://tnpds.gov.in/) அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது, ஆதார் அட்டையை புதுப்பித்த பிறகு திருத்தப்பட்ட ஆதார் அட்டை நகலை எடுத்துக்கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க உணவுத் துறை அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க ஆதார் அட்டையும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் தேவை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!