இனி அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை – வலுக்கும் எதிர்ப்புகள்!

0
இனி அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை - வலுக்கும் எதிர்ப்புகள்!
இனி அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை - வலுக்கும் எதிர்ப்புகள்!
இனி அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை – வலுக்கும் எதிர்ப்புகள்!

இஸ்லாமியர்களின் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் பள்ளிகள் குறித்த ‘நிலை அறிக்கையை’ கல்வி அமைச்சர் கேட்டுள்ளார், ஆனால் விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றுவது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்புகள் தற்போது கிளம்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை:

பீகாரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பல வருட கோரிக்கையை ஏற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ளும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று வாராந்திர விடுமுறை அளித்து, அதற்கு பதிலாக ஞாயிற்று கிழமையை பணி நாளாக அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பதிலாக வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் கிஷன்கஞ்ச், பூர்னியா, அராரியா மற்றும் கதிஹார் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்த “நிலை அறிக்கையை” பீகார் கல்வி அமைச்சர் விஜய் சவுத்ரி கேட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த நடைமுறை எப்படி, எப்போது தொடங்கியது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதிகளை கல்வி அமைச்சர் கேட்டுள்ளார். இருப்பினும், பள்ளி விடுமுறையை சரி செய்வது குறித்து அமைச்சரும், ஜனதா தளம் (யுனைடெட்) தலைவரும் எதுவும் கூறவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பீகாரில் பிரச்சினை எழுந்தது. ஜார்க்கண்ட் அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்ட பள்ளிகளில் முன்பை போல் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியது. தற்போது பீகாரில் அவ்வாறே மாற்ற வேண்டும் என்று பாஜக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் நீங்களும் ஒரு அங்கமாக வேண்டுமா? இத மிஸ் பண்ணாம படியுங்க!

அப்பகுதியில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நடைமுறையில் இருக்கலாம் என்று கல்வி அமைச்சகம் மதிப்பிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் இதை சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே சரியான எண்ணிக்கை தெரியவரும் என்று கல்வி அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், “அரசாங்கத்தைப் பொருத்தவரை அனைத்து அரசு நிறுவனங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் இயங்க வேண்டும்” என்று துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மாநிலத்தில் இரு தரப்பினரிடையே பலத்த கருத்து மோதல் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here