விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயலும் கணவர் ஹேம்நாத்? தாயார் ஆவேசம்!

0
விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயலும் கணவர் ஹேம்நாத்? தாயார் ஆவேசம்!
விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயலும் கணவர் ஹேம்நாத்? தாயார் ஆவேசம்!
விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயலும் கணவர் ஹேம்நாத்? தாயார் ஆவேசம்!

சமீபத்தில், நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் கூறி வரும் நிலையில், இந்த வழக்கை ஹேம்நாத் திசை திருப்ப பார்ப்பதாக சித்ராவின் அம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை சித்ரா மரணம்

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் இன்று வரையும் புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. அதாவது, சென்னை நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் உடன் இருந்த அவரது கணவர் ஹேம்நாத் மீது சந்தேகம் கொண்ட சித்ராவின் பெற்றோர் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். தொடர்ந்து, நடிகை சித்ராவை தற்கொலை செய்ய தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

TN Job “FB  Group” Join Now

இப்போது நடிகை சித்ராவின் கணவர் ஜாமினில் இருக்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் ஹேம்நாத், சித்ராவின் மரணம் தொடர்பான சில விஷயங்களை பேசி வருகிறார். அதாவது, சித்ராவின் மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்க, ஹேம்நாத் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தான் இது போன்ற விஷயங்களை பேசுகிறார் என சித்ராவின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருட்கள் தரத்தை கண்காணிக்க குழு!

இது குறித்து அவர் கூறும் போது, ‘சித்ரா இறந்த போதே அவருக்கு அரசியல்வாதி மகனின் தொல்லை இருந்தது பற்றி ஹேம்நாத் என்னிடம் கூறி இருக்கலாம். சித்ரா இறந்ததற்கு பிறகு ஹேம்நாத் கடைசியாக டிசம்பர் 7ம் தேதி தான் என்னுடன் பேசினார். அவர் தவறு செய்யவிட்டால் என்னிடம் தொடர்ந்து பேசி இருக்கலாமே. என் மகளை தேவதை போல் பார்த்து கொள்கிறேன் என கூறினார். ஆனால் என்ன செய்தார். இப்போது அவரை சிலர் மிரட்டுவதாக கூறுகிறார். ஹேம்நாத் பைனான்ஸ் பிரச்சனையில் இருந்த போது என் மக்களுக்கு ஏதேனும் நடந்து விடுமோ என்று பயந்தேன். அதற்கு ஹேம்நாத் என் மகளுடன் இருப்பதாக கூறினார். ஆனால் இப்போது என்ன நடந்தது. என் மகளை மனைவி என்று கூறுகிறார். ஆனால் அவர் இறந்ததும் ஒரு கணவராக எந்தவொரு சடங்கையும் ஹேம்நாத் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here