கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஹேமா – ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஹேமா - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஹேமா - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஹேமா – ப்ரோமோ ரிலீஸ்!

கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைத்து கண்ணம்மாவை அம்மாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹேமா நினைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தனது பள்ளி விழாவில் இது பற்றி கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போதுதான் ஒன்று சேர போகிறார்களோ என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யாருமே கண்ணம்மா மீது பாசம் காட்டாத போது பாரதிதான் கண்ணம்மாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு கண்ணம்மா கர்ப்பமானதுமே பாரதிக்கு சந்தேகம் என்கிற நோய் வந்து தொற்றிக் கொண்டது. அதாவது கண்ணம்மா வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது கிடையாது என கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.

Exams Daily Mobile App Download

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் மட்டும் பாரதிக்கு குறையவே இல்லை. தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக கண்ணம்மா தான் மிகவும் முயற்சி செய்து அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார். குழந்தையின் உயிரை காப்பாற்றியதும் கண்ணம்மா மீது பாரதிக்கு இனம்புரியாத பயம் வருகிறது. இருவரும் சேர்ந்து விடுவார்களோ என எதிர்பார்த்த சமயத்தில் மீண்டும் கண்ணம்மாவை வெறுத்து கொண்டுதான் இருக்கிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

தற்போது லட்சுமி படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடக்கிறது. அதில் பேச்சுப் போட்டியில் ஹேமா தான் முதல் பரிசு வாங்குகிறார். பாரதியையும் மேடைக்கு அழைத்து எனது அப்பாதான் எனக்கு எல்லாமே என கூறி புகழ்ந்து பேசுகிறார். எனக்கு அம்மா கிடையாது எனக்கு அம்மாவின் பாசம் கிடைக்க வேண்டும் எனவும் மிகவும் ஏங்குகிறேன் என கூறுகிறார். லட்சுமிக்கு அப்பா கிடையாது எனக்கு அம்மா கிடையாது என கூறி மேடையில் உருக்கமாக பேசுகிறார் . லட்சுமியும் ஹேமாவும் அம்மா அப்பா பாசத்திற்கு ஏங்கி கொண்டிருப்பதை நினைத்து கண்ணம்மா மிகவும் வருத்தப் படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!