விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் துளசியுடன் இணைந்த ஹேமா – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!
சமீப காலமாக மக்கள் மத்தியில் வைரலாகி கொண்டிருக்கும் டிக்கிலோனா திரைப்படத்தின் காட்சிகளை ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஷெரின் மற்றும் லிசா இருவரும் இணைந்து ரீல்ஸ் செய்து வலைதளங்களில் பதிவிட அந்த காணொளி பிரபலமாகி வருகிறது.
ரீல்ஸ் வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கோணத்தில் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் ஹேமா பற்றிய உண்மை கண்ணம்மாவுக்கு தெரிந்திருக்கும் சூழலில், அது பாரதியின் காதுகளுக்கு எட்ட எவ்வளவு நேரம் ஆகும் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். இந்த உண்மை எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவுக்கு பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகர், நடிகைகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோக்களும் பிரபலம் தான். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் ஏதாவதொரு இடைவேளை கிடைத்தவுடன் பாரதி கண்ணம்மா நடிகர் நடிகைகள் அனைவரும் ரீல்ஸ் செய்ய துவங்கி விடுகின்றனர். அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புது புது ரீல்ஸ் வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
3,500 ரூபாயில் JioPhone Next ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகம் – ஆண்ட்ராய்டு 11 OS & 13 MP கேமரா!
அந்த வரிசையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து குழந்தை நட்சத்திரம் லிசா மற்றும் நடிகை ஷெரின் ஆகியோர் இணைந்து புதிய ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். அதாவது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிக்கிலோனா திரைப்படத்தில் வரும் பிரபல டயலாக் ஒன்றுக்கு ‘பாரதி கண்ணம்மா’ ஹேமா மற்றும் துளசி செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அதனை வைரல் செய்து வருகின்றனர்.