‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து திருப்பதி சென்ற மீனா ஹேமா – வைரல் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து திருப்பதி சென்ற மீனா ஹேமா - வைரல் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து திருப்பதி சென்ற மீனா ஹேமா - வைரல் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து திருப்பதி சென்ற மீனா ஹேமா – வைரல் வீடியோ!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா, தனது யூடுயூப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பதி கோவிலை பற்றிய புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

நடிகை ஹேமா:

சீரியலில் நடித்து வரும் அனைவரும் தற்போது தனியாக யூடுயூப் சேனல் நடத்தி வருவதை பொழுது போக்காக செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு புகழ் ஒரு பக்கமும், வருமானம் ஒரு பக்கமும் டபுள் போனசாக உள்ளது. சின்னத்திரையில் இவர்கள் நடிப்பதால் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகை ஹேமாவும் தனியாக ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது கணவருடன் அடிக்கடி போடும் சண்டைகள் அதிக சுவாரஸ்யமாக இருப்பதால் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பொது விடுமுறை அறிவிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்த ஒற்றுமை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அந்த வீட்டின் ஆண்கள் வழக்கம் போல் ஒற்றுமையாக உள்ள போதிலும், பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது கதையின் போக்கை மாற்றியுள்ளது. ஹேமா சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருப்பார். அவ்வப்போது வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.17 வேலை நாள்!

தனது வீட்டில் இருந்து கீழ் திருப்பதி சென்றது, மேல் திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு சாமி தரிசனத்திற்கு சென்று வந்தது என அனைத்தையும் அந்த வீடியோவில் காண்பித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் சென்றுள்ள அதே நாளில் தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களும் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார் என்பது தான். மேலும், திருப்பதியில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட குட்டி குட்டி வழிப்பாட்டு தளங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பெருமாள் பாதம். திருப்பதி செல்பவர்கள் நேரம் இருந்தால் கட்டாயம் இங்கு சென்று வரும்படி மீனா நேயர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here