இதை செய்யும் வாரிசுகளுக்கு சொத்தில் சல்லி பைசா கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
இதை செய்யும் வாரிசுகளுக்கு சொத்தில் சல்லி பைசா கிடையாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இதை செய்யும் வாரிசுகளுக்கு சொத்தில் சல்லி பைசா கிடையாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இதை செய்யும் வாரிசுகளுக்கு சொத்தில் சல்லி பைசா கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்களை தங்கள் பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் தங்களின் சொத்துக்களை எழுதிவைக்கிறார்கள். ஆனால், இதில் ஒரு புதிய மாற்றத்தை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிரடி தீர்ப்பு:

தங்களது வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து சொத்துக்களை வாங்கி, முழு மனதோடு தங்கள் பிள்ளைகளுக்கு எழுதி கொடுக்கும் பெற்றவர்கள் தான் இங்கு அதிகம் பேர் உள்ளனர். தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு பின்னால் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் தங்கள் சேமிப்பை முழுவதுமாக பிள்ளைகளிடம் கொடுத்து விடுகின்றனர். ஆனால், பிள்ளைகள் சுயநலமாக யோசித்து தங்கள் கடமைகளில் இருந்து தவறி இதுபோன்றவற்றை செய்வதற்கு பெற்றோர்களை யோசிக்க வைக்கும் அளவிற்கு நடந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னையை சேர்ந்த முதியவர், தனது சொத்துக்களை தனது மூத்த மகனின் பெயரில் எழுதி வைத்துள்ளார். ஆனால் அவரது மகன் பெற்றோரை கவனிக்காமலும், அவர்களுக்கு வேண்டிய மருத்துவ செலவுகளை கூட செய்யாமல் இருந்துள்ளார். இதனால், முதியவர் தான் எழுதி வைத்த சொத்துக்களை மீண்டும் பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழகத்தில் அக்டோபர் 11 அன்று இந்த பகுதிகளில் Power Cut – முழு விவரங்கள் உள்ளே!

Exams Daily Mobile App Download

ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் வழக்கை மேல் முறையீடு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆஷா அவர்களிடம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும், பெற்றோரை கவனிக்காத மகனின் செயல் இதயமற்றது என்றும் வேதனைப்பட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!