தூத்துக்குடி மாநகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!

0
தூத்துக்குடி மாநகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!
தூத்துக்குடி மாநகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!
தூத்துக்குடி மாநகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நேரத்தை மாற்றி அமைக்க இருப்பதாக அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு அரசு உடனே தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் குறித்து தீர்வுக்கான நடைமுறைப்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் கனரக வாகனங்கள் வர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன் படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!