கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

0
கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கர்நாடகாவில் தட்சிண கன்னடா மற்றும் ஷிவமொக்கா மாவட்டங்களில் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மையம் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து “அசானி” புயலாக வலுப்பெற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மற்றும் ஷிவமொக்கா ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு, உதவி பெறும், உதவிபெறாத தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தட்சிண கன்னடா துணை ஆணையர் கே.வி. ராஜேந்திரன் பள்ளி குழந்தைகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று இரவு முதல் தட்சிண கன்னடா முழுவதும் இடைவிடாது மழை பெய்தது, இதன் காரணமாக தான் (மே 19) இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.990 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

மேலும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் (மே 19ஆம் தேதி) இன்று விடுமுறை அறிவித்து சிவமொக்கா துணை ஆணையர் செல்வமணி ஆர் உத்தரவு பிறப்பித்தார். இந்த விடுமுறை அரசு, உதவி பெறும் மற்றும் உதவி பெறாத பள்ளிகளுக்கு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஷிவமொக்காவிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஷிவமொக்கா நகரத்தில் 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று இடியுடன் கூடிய மிக கனமழை, 205 மிமீ க்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here