தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை – முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து மழையால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை பணிகள்:
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வார காலமாக அணைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. பொதுவாக ஆடி மாதம் என்றால் காற்று தான் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதனால் நீலகிரியில் மூன்றாவது நாளாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் 7,880 பேர் முறைகேடு? தேர்வாணைய கமிஷனர் விளக்கம்!
அதனை தொடர்ந்து வங்கக்கடலில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சராசரியாக மாநிலத்தில் 10.59 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேட்டூர் அணையிலிருந்து 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. அதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 110 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து பாதிப்புகளை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, உணவு , உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.