தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, 21.05.2022 முதல் 25.05.2022 ஆகிய தினங்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வானிலை அறிக்கை:

  • தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • 21.05.2022, 22.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
Exams Daily Mobile App Download

23.05.2022 முதல்‌ 25.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

  • சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.
  • தென்‌ மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌.

25.05.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

  • தென்‌ மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.
  • மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

21.05.2022, 22.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதி மற்றும்‌ தென்‌ தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here