தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிக்கை!

கடலோர பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

18.04.2022: வட தமிழக கடலோர பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, நாமக்கல்‌, திருச்சி மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமுதல்‌ மிககன மழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, கரூர்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

TN TET தேர்வுக்கு ஏப்.26ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம்!

19.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்தமிழகம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.04.2022: தென்‌ தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.04.2022: வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌, தென்‌ தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

PGCIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,17,500/- சம்பளம்..!

22.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. .

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மமை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!