தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 20) கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 20) கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 20) கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 20) கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று (ஜூலை 20) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஜூலை 21) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

நாளை மறுநாள் (ஜூலை 22) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23.07.2022, 24.07.2022 ஆகிய தினங்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!