தமிழகத்தில் மிக கனமழை அறிக்கை வாபஸ் – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது மிக கனமழைக்கான அறிக்கை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மிக கனமழை:
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கம் முதல் பருவ மழை தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட நடப்பாண்டு அதிக அளவிலான மழை பொழிவு பதிவாகியுள்ளது. அனைத்து நீர் நிலைகளிலும் நீரின் முழு கொள்ளளவு எட்டி வருகிறது. இதனால் அணைகளில் இருந்தும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விளைச்சலுக்கு தயாரான பயிர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது நல்ல சான்ஸ் மக்களே.. Use பண்ணிக்கோங்க – சரிந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் பெண்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்ம் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றத்த தாழ்வு பகுதியாக மாறி அதே நிலையில் நீடித்ததால் இன்று தமிழகத்தில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிலை மாறியிருப்பதால் கனமழைக்கான எச்சரிக்கை மீண்டும் திரும்ப பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை தெரிவித்துள்ளது.