தமிழகத்தில் அக்.05 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தில் அக்.05 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அக்.05 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அக்.05 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, இருப்பத்தூர்‌, சேலம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ இன்று (அக்.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து நாளை (02.10.2022) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதில் நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அக். 03 முதல் 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக தொடக்கம் – பிரதமர் பெருமிதம்!

Exams Daily Mobile App Download

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மேலும் அக். 1 முதல் 4ம் தேதி வரை குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, தென்‌கிழக்கு அரபிக்கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!