தமிழக மாவட்டங்களுக்கு 5 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை – வானிலை நிலவரம்!
தமிழகத்தில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்த எச்சரிக்கை பதிவை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 24 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி நிலவும். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நவ.18 குறைதீர் முகாம்!!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நவம்பர் 17ஆம் தேதி வரை நிலவக் கூடும் என்றும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும். நவம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நவம்பர் 17ஆம் தேதி வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.