தமிழகத்தில் இன்னும் 6 நாட்களுக்கு கனமழை இருக்கு – வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போதே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை செப்டம்பர் 24 ஆம் தேதி வரையிலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பொழியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரிக்கை – போராட்டம் நடத்த முடிவு!
மேலும், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வெயிலின் தாக்கமும் குறைந்திருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, மத்திய வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.