தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – முக்கிய எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடுய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதார் அட்டையில் உங்களுடைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மேலும், இந்த கனமழை நவம்பர் 16 ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை ஏதும் இல்லாத காரணத்தினால் மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.