தமிழகத்தில் 17% குறைவான மழைப்பொழிவு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் வழக்கத்தை காட்டிலும் வடகிழக்கு பருவமழை 17% குறைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
பருவமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில்,தீபாவளி பண்டிகையையொட்டி கனமழை வெளுத்துவாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நேற்று எதிர்பார்த்தபடி கனமழை இல்லை. இதனிடையே, நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வந்த உள்ளூர் விடுமுறை… மாணவர்கள் கவனத்திற்கு!
ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் வடகிழக்கு பருவமழை குறைந்திருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பெய்த மழையின் அளவை அளவீடு செய்ததில் 17 சதவீதம் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.