தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எப்போது? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எப்போது? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எப்போது? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எப்போது? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தினை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிராக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு வழங்கப்பட்டது. அதற்கான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

மின்கட்டண உயர்வு

அனைத்து இடங்களிலும் தற்போது மின்சாரம் முக்கியமான ஒரு பங்கினை வகித்து வருகிறது. மின்சாரம் இல்லாமல் எதுவுமே நடைபெறாது என்ற நிலையம் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சிறந்த துறையாக மின்சார வாரியம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் 100 யூனிட் மின்சாரம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போல கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணத்தில் எந்த வித உயர்வும் இல்லாமலும் இருந்து வந்தது. அதற்கான நடவடிக்கைளை தற்போது மின்சார வாரியம் தீவிரமாக பார்த்து வருகிறது.

தமிழக மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ.1.58 லட்சம் கோடி அதே போல 2021-22-ல் மின்வாரியம் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ.16,511 கோடி ஆகும். இந்த அளவிற்கான கடன் தொகையினை சரி செய்ய மின் கட்டண உயர்வு தான் ஒரே தீர்வு என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. அதே போல இந்த மின்கட்டண உயர்விற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு தமிழக நூற்பாலை மனுத் தாக்கல் ஒன்று செய்திருந்தார்.

Jio 5G சேவையினால் நிறுவனங்களுக்கு பாதிப்பு? முக்கிய தகவல் இதோ!

அதில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார். அந்த பதவிக்கு ஒருவரை நியமனம் செய்த பின்னர் தான் மின் கட்டண உயர்வு குறித்து பேச வேண்டும் என்று அந்த மனுவில் கோரி இருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மின் கட்டண உயர்விற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடைக்கு தமிழக அரசு மேல் முறையீட்டு மனு ஒன்றை அளித்திருந்தது. இந்த மனுவிற்கான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. இன்று நீதிபதிகள் அளிக்க இருக்கும் பதிலில் தான் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தெரிய வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!