இந்தியாவில் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!
இந்தியாவில் இதுவரை 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார். 2025 மார்ச் மாதத்திற்குள் 10500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மக்கள் மருந்தகங்கள்:
இந்தியாவில் ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன் பெறும் வகையில் பிரதமரின் பாரத மக்கள் மருத்துவ திட்டத்தின் கீழ் மத்திய அரசு மக்கள் மருந்தகங்களை திறந்தது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல மருந்துகளை வழங்கி வருகிறது. கடந்த 2ம் தேதி வரை நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிதாக வழங்கப்பட்ட பட்டாக்களில் குளறுபடிகள் – மக்கள் புகார்!
இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மருந்தகங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் 10 ஆயிரம் மருந்தகங்கள் என்ற இலக்கை அடைந்து விடுவோம் என பிரதமர் கூறினார். அதற்கு அடுத்தபடியாக 2025 மார்ச் மாதத்திற்குள் 10,500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும் என குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
உலக சுகாதார நிறுவனத்தின் சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கான சான்றளிக்கப்பட்ட உள்நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஜனவ்ஷாதி மையங்களுக்கான மருந்துகள் வாங்கப்படுகின்றன எனவும், இந்த மருந்துகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மருந்தக கடை உரிமையாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.