தமிழகத்தில் பரவும் டெங்கு குழந்தைகளுக்கு பாதிப்பு – சுகாதாரத்துறை நடவடிக்கை!

0
தமிழகத்தில் பரவும் டெங்கு குழந்தைகளுக்கு பாதிப்பு - சுகாதாரத்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் பரவும் டெங்கு குழந்தைகளுக்கு பாதிப்பு - சுகாதாரத்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் பரவும் டெங்கு குழந்தைகளுக்கு பாதிப்பு – சுகாதாரத்துறை நடவடிக்கை!

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்புக்கு திரும்பி வரும் நிலையில் அடுத்த தாக்குதலாக டெங்கு காய்ச்சல் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தொடர் மழையால் ஏற்பட்டுள்ள கழிவுநீர் தேக்கத்தால் டெங்கு கொசுவால் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் சூழலில் தமிழகத்தில் கோவை, மதுரை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி டெங்கு பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’ வார்டுகளாக பட்டியலிட்டு கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி & தபால் திட்ட வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

இந்த மழை காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல் அதிகரித்து வருவதை தடுக்க சூடான தண்ணீர், தேன் போன்றவை கொடுக்கலாம். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் இருமல் சிரப்பு வாங்கி உட்கொள்ளலாம் என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை துணை மருத்துவ இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். அத்துடன் காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here