இந்தியாவில் கொரோனா 2வது அலையில் குழந்தைகள் பாதிப்பு – சுகாதாரத்துறை விளக்கம்!

0
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் குழந்தைகள் பாதிப்பு - சுகாதாரத்துறை விளக்கம்!
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் குழந்தைகள் பாதிப்பு - சுகாதாரத்துறை விளக்கம்!
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் குழந்தைகள் பாதிப்பு – சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா 3ம் அலையால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்:

கொரோனா முதல் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. பிறகு நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது கொரோனா உருமாறி இரண்டாம் அலையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பாராத அளவுக்கு பாதிப்புகள் உயர்ந்து விட்டது. நாள் ஒன்றிற்கு 4 லட்சம் வரை பாதிப்புகளும், 4000 மரணங்களும் பதிவாகி வந்தது.

ஆகஸ்ட் மாதம் JEE, NEET 2021 தேர்வுகள்? வெளியான தகவல்!

2ம் அலை கிராமப்பகுதி மக்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் அதிகம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையில் இளைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு தொற்று பரவவில்லை. ஆனால் 2ம் அலையால் இளைஞர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏறக்குறைய உச்சத்தில் இருந்த பாதிப்பு தற்போது 84 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

11 வயதில் இருந்து 20 வயதுக்கு உட்பட்டோர் முதல் அலையில் 8.03% பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2வது அலையில் பாதிப்பு சதவீதம் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா முதல் அலையில் ஒரு வயதிலிருந்து 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 3.28 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். 2வது அலையில் 3.05 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். மேலும் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!