‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக இனி இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீப காலமாக நடிகைகள் மாற்றம் என்பது அடிக்கடி நடந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒருவரை புது வரவாக மாற்ற இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுவரவு:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் மிகவும் பெரிய அளவில் ரீச் ஆகியது. மிகவும் ரசிக்கப்படும் கதாபாத்திரங்களில் முல்லை முதல் இடத்தில் இருந்து வந்தது. இதன் பின்னர் எதிர்பாராத விதமாக சித்ரா மரணமடைந்து விட்டார். இதனால் முல்லை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பார்கள் என்று பலரும் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் முல்லையின் தீவிர ரசிகர்கள் வேறு யாரும் சித்துவின் நடிப்பை இடத்தை பிடிக்க முடியாது என்று கூறி வந்தனர்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு!
இந்நிலையில், தான் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி வேடத்தில் நடித்து வந்த காவ்யா முல்லையாக கடந்த வருடம் முதல் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்து வந்த நிலையில், தற்போது மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் காவ்யா. இதனால் இவரது கதாபாத்திரம் சரியாக சென்று வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!
அதன்படி, சுந்தரன் நானும் சுந்தரி நீயும் தொடரில் நடித்து வந்த நாயகி தேஜஸ்வினி, தான் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லையாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் எதனால் என்று இன்னும் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், இன்னும் எத்தனை முறை தான் முல்லை கதாபாத்திரத்தை மாற்றுவீர்கள் என்று சீரியல் குழுவினரை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.