சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – HDFC வங்கியில் வீட்டு கடன் வட்டி குறைப்பு!

0
சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு - HDFC வங்கியில் வீட்டு கடன் வட்டி குறைப்பு!
சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு - HDFC வங்கியில் வீட்டு கடன் வட்டி குறைப்பு!
சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – HDFC வங்கியில் வீட்டு கடன் வட்டி குறைப்பு!

எச்.டி.எப்.சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 6.70% வட்டியில் வீட்டு கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

HDFC வங்கி:

இந்தியாவில் வங்கி என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. கடந்த மாதங்களில் நிலவிய கொரோனா ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் மக்களின் சேவைக்காக பகுதி நேரம் 50% ஊழியர்களுடன் இயக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிகள் தனது வாடிக்கையாளர்கள் பெற்ற கடனை செலுத்த கால அவகாசம் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மக்களுக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன், வீட்டுக் கடன் மருத்துவ கடன் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு வீடு வாடகைப்படி நிறுத்தம் – அரசாணை வெளியீடு!

மற்ற வங்கிகளை தொடர்ந்து தற்போது எச்.டி.எப்.சி தனியார் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வழங்குகிறது. அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருக்கும். அதற்காக வங்கிகளில் லோன் வாங்க முயல்வர். சொந்த வீடு கனவை நிறைவேற்றி கொள்ள வாடிக்கையாளர்கள் எச்.டி.எப்.சி வங்கி 6.75% வட்டியில் வீட்டு கடன் வழங்கியது.

அழகப்பா பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!

தற்போது இந்த வீட்டு கடன் வட்டி பண்டிகை கால சிறப்பு சலுகையாக குறைக்கப்பட்டு 6.70% ஆக வழங்குகிறது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை இந்த வட்டி விகிதம் அளிக்கப்படும் என்று எச்.டி.எப்.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வீட்டு கடன் வாங்க விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இந்த வட்டி பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகிதம் மூலம் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள் என அனைவரும் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!