Degree முடித்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
கடந்த மாதம் பிரபல IT நிறுவனமான HCL வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Senior Analyst பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாளை (04.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- HCL நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Analyst பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் BSc, Engineer degree, MBA, M.Com, M.Sc, MSS(Master of Software Systems), PGCBM, PGDBA (Post Graduate Dip in Bus Admin), PGMP (Program Management Professional) போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
- Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பிரிவுகளில் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்கலாம். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.
- Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
HCL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் (04.05.2022) மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.