இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் ITI முடித்தவர்ளுக்கு வேலை – தேர்வு கிடையாது!
Apprentices பணிக்கு என இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (18.11.2023) முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறவும்.
HCL Apprentices வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
- தற்போது வெளியான அறிவிப்பின் படி, HCL நிறுவனத்தில் Apprentices பிரிவின் கீழ் வரும் Fitter பணிக்கு என 06 பணியிடங்களும், Plumber பணிக்கு என 01 பணியிடமும், Welder பணிக்கு என 01 பணியிடமும், Electrician பணிக்கு என 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 08ம் / 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடையாதவராக இருப்பின் அவர்கள் மட்டும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
- இந்த HCL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Apprentices விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ITI மற்றும் 10ம் வகுப்பின் இறுதியில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு Merit List என்னும் தேர்வு முறை வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
HCL விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 19.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.