HCL நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – சம்பள உயர்வு!

0
HCL நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - சம்பள உயர்வு!
HCL நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - சம்பள உயர்வு!
HCL நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – சம்பள உயர்வு!

இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான HCL புதிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு கணிசமான தொகையை ஊதியமாக வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அம்பல உயர்வு

இரண்டு வருட கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு இப்போது தான் இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிகிறது. இந்த செயல்பாடுகளின் ஒரு கட்டமாக முன்னணி IT நிறுவனங்கள் தனது அலுவலகங்களில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் நொய்டாவை சேர்ந்த ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ், புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் சம்பளத் தொகுப்பை ஆண்டுக்கு ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.4.25 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

ExamsDaily Mobile App Download

இதனுடன், இந்த நிறுவனம் முந்தைய நிதியாண்டில் (FY22) நுழைவு நிலைக்கு விரிவான அதிகரிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக தலைமை மனித வள அதிகாரி விவி அப்பாராவ் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எங்கெல்லாம் திறமைகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம். புதிய திறமைகளை பார்த்தால், இன்று பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4.25 லட்சம் செலுத்துகிறோம். இந்த சம்பள உயர்வு மற்றும் மதிப்பீட்டுத் திட்டங்களில் நிறுவனத்தின் மாற்றம் அதிக திறமையாளர்களை ஈர்ப்பதையும், கடுமையான அட்ரிஷன் சவாலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கு வரும் ஜூலையில் ஊதிய உயர்வு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது அமைப்பு மூலம் தக்கவைத்தல் மற்றும் புதிய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம், தற்போதைய 20 சதவீத நிலைகளில் இருந்து தேய்வு விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வருவாயின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மென்பொருள் சேவை வழங்குனரான HCL இப்போது சிறிய நகரங்களிலும் வெளிநாட்டிலும் அதன் திறமை தளத்தை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

கடந்த 2021-22ம் நிதியாண்டில் IT நிறுவனம் சுமார் 23,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்தது. சமீபத்தில் கூட நடப்பு ஆண்டில், HCL ஏறக்குறைய 34,000 புதிவர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக முன்னறிவித்துள்ளது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் மொத்தம் 208,877 பணியாளர்களில், புதிய ஆட்சேர்ப்பு சுமார் 11 சதவீதமாக இருக்கிறது என்றும் இது TCS மற்றும் Infosys போன்ற போட்டி நிறுவனங்கள் அளித்த வேலை வாய்ப்புகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!