பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் & நேரடி முறையில் பாடங்கள் – நீதிமன்றம் கருத்து!

0
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் & நேரடி முறையில் பாடங்கள் - நீதிமன்றம் கருத்து!
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் & நேரடி முறையில் பாடங்கள் - நீதிமன்றம் கருத்து!
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் & நேரடி முறையில் பாடங்கள் – நீதிமன்றம் கருத்து!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி வகுப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் பாடங்கள் திருப்தி அளிக்காத நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல தரப்பினர் கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கி வந்தது. இருப்பினும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல தரப்பினர் கேள்வி எழுப்பி வந்ததால் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா 3ம் அலை பரவும் என பெற்றோர்கள் பயப்படுவதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு – சத்துணவு வழங்க ஏற்பாடு!

ஏற்கனவே வெளியான அறிவிப்பின் படி மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்று அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உடல்நலம் சரியில்லாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!