நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான கட்டுப்பாடுகள் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி சுற்றுலா:

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று நீலகிரி. மலைகளின் அரசி எனப்படும் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி போன்ற சிறந்த சுற்றுலா தளங்கள் நீலகிரியில் உள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிவர். கண்ணுக்கெட்டும் தூரம் வரை உள்ள மலைகள் சுற்றுலா பயணிகளை கவர்கிறது. கடந்த வருடம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிபவர்கள், கடை வைத்திருக்கும் வியாபாரிகள் என அனைவரும் வருமானம் இழந்து சிரமப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடம் – புதிய திட்டம்!

இடையில் கொரோனா முதல் அலை தொற்று குறைந்த நிலையில் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் பரவிய கொரோனா இரண்டாம் அலை அம்சத்தால் மீண்டும் பயணிகள் வருகை மறுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு தற்போது சுற்றுலா தளங்களில் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்கள் வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னைவாசிகள் கவனத்திற்கு, முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!

இந்த வழக்கு விசாரணையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நச்சு புகை பரவுவதாகவும், இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது. இது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றனர். விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர். இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here