இந்த வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ நீங்க ராஜா தான் – பிக்சட் டெபாசிடுக்கு 7.75% வட்டி!

0
இந்த வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ நீங்க ராஜா தான் - பிக்சட் டெபாசிடுக்கு 7.75% வட்டி!
இந்த வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ நீங்க ராஜா தான் - பிக்சட் டெபாசிடுக்கு 7.75% வட்டி!
இந்த வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ நீங்க ராஜா தான் – பிக்சட் டெபாசிடுக்கு 7.75% வட்டி!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி அதிகரிக்க இருக்கிறது. அதனால் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

உயரும் வட்டி:

மக்கள் தங்களது எதிர்கால தேவைகளுக்காக வங்கிகளில் குறிப்பிட்ட தொகையை பிக்சட் டெபாசிட் செய்து வைக்கின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வாங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ள நிலையில், அதனால் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி அதிகரிக்க இருக்கிறது. இந்நிலையில் தனியார் துறை வங்கியான யெஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலமாக அதிகபட்சம் 7.75 சதவீதம் வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் அக்டோபர் 12 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 2 கோடிக்கும் குறைவாக பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2 கோடிக்கும் குறைவாக பிக்சட் டெபாசிட் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 20 மாதங்கள் முதல் 22 மாதங்கள் வரை முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாது கொட்டப்போகும் கனமழை.. “இந்த” 9 மாவட்ட மக்களே உஷாரா இருங்க – வானிலை மையம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் படி, 7-14 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.25% வட்டி கிடைக்கும். 15-45 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.70% வட்டி கிடைக்கும், 46-90 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.10% வட்டி கிடைக்கும், 3-6 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.75% வட்டி கிடைக்கும், 6-9 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 5.50% வட்டி கிடைக்கும், 9-12 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 5.75% வட்டி கிடைக்கும், 12-18 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.25% வட்டி கிடைக்கும், 18-120 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.75% வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!