சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா? உடனே சரி பாருங்க!

0
சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா? உடனே சரி பாருங்க!
சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா? உடனே சரி பாருங்க!
சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா? உடனே சரி பாருங்க!

LPG சிலிண்டருக்கான மானியம் வங்கிக்கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா என்பதை ஆன்லைன் மூலமாகவே சரிபார்த்து கொள்ளலாம். தற்போது எப்படி மானியத்தொகை வந்தடைந்துவிட்டதா என்பதை சரிபார்க்கலாம் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியம் 

நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அதாவது, ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் LPG கேஸ் சிலிண்டரின் விலை முறையாக திருத்தம் செய்யப்படுகிறது. இந்த சிலிண்டரின் விலையை சமாளிக்க அரசின் தரப்பில் இருந்தே வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பலருக்கும் சிலிண்டருக்கான மானியத்தொகை முறையாக சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exams Daily Mobile App Download

எப்போதுமே, சிலிண்டருக்கான முழு தொகையையும் வாடிக்கையாளர் பணம் கொடுத்து வாங்கிய பிறகு அந்த சிலிண்டருக்கான மானியத்தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது. ஆனால், சிலிண்டருக்கான மானியத்தொகை பெறுவதிலும் சில நிபந்தனைகள் இருக்கிறது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் சிலிண்டருக்கான மானியம் வழங்கப்படாது மற்றும் ஆதார் கார்டுடன் சிலிண்டர் கார்டினை கண்டிப்பாக இணைந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

மேலும், ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும்போதும் சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா என்பது சந்தேகமாகவே இருக்கும். தற்போது ஆன்லைன் மூலமாகவே மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா என்பதை பார்க்கலாம். முதலில் Mylpg.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின்பு, Give your feedback online என்பதை கிளிக் செய்து வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர் முதலான அனைத்து விவரங்களையும் நிரப்பி Feedback Type என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, Complaint என்பதை தேர்வு செய்து Next கொடுக்க வேண்டும். இதன் மூலமாகவே சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்துவிட்டதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!