கேஜிஎஃப் ராக்கி பாய்யின் அம்மா சீரியலில் நடித்துள்ளாரா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

0
கேஜிஎஃப் ராக்கி பாய்யின் அம்மா சீரியலில் நடித்துள்ளாரா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!
கேஜிஎஃப் ராக்கி பாய்யின் அம்மா சீரியலில் நடித்துள்ளாரா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!
கேஜிஎஃப் ராக்கி பாய்யின் அம்மா சீரியலில் நடித்துள்ளாரா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!

கே ஜி எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. இந்த திரைப்படத்தில் ராக்கி பாயின்அம்மாவாக அர்ச்சனா ஜோஸ் நடித்திருப்பார். அவர் சீரியலிலும் நடித்துள்ளார் என்கிற விஷயம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கே ஜி எஃப்:

தமிழ் புத்தாண்டன்று வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபீஸ் அளவில் வசூல் வேட்டையை கேஜிஎப் 2 திரைப்படம் நடத்தி வருகிறது. கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. முதல் பாகமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் எக்கச்சக்கமான பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கேஜிஎப் 2 திரைப்படத்தில் யாஷ் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முக்கிய கோரிக்கை!

கே ஜி எஃப் 2 திரைப்படம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் முதலிய ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலுமே சிறப்பான ஆதரவை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்றும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகவே இருக்கிறது. கே ஜி எஃப் திரைப்படத்தில் நாயகன் யாஷ்ஷுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றவர்தான் அர்ச்சனா ஜோஸ். உண்மையில் அர்ச்சனா ஜோஸ்ஸுக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. மேலும், கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும்போது அர்ச்சனாவுக்கு வெறும் 24 வயதே ஆகி உள்ளது.

24 வயதிலும் அவ்வளவு பெரிய பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் நாயகன் யாஷ்ஷின் அம்மாவான அர்ச்சனா ஜோஸ் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. யாஷ் அம்மாவாக நடித்த அர்ச்சனாக்கு இவ்வளவு வயதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் அர்ச்சனா ஏற்கனவே ஒரு சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்கிற விஷயம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் இன்னும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுப்புலட்சுமி என்னும் தொடரில் நடித்து இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here