இரவு நேர ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை அமல் – மாநில அரசு உத்தரவு!!

0
இரவு நேர ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை அமல் - மாநில அரசு உத்தரவு!!
இரவு நேர ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை அமல் - மாநில அரசு உத்தரவு!!
இரவு நேர ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை அமல் – மாநில அரசு உத்தரவு!!

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் இரவு நேர ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அமல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று:

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு ஆரம்பம் முதல் பரவி வந்த காரணத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், 2020 ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால் மாநிலத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து தளர்வுகளை அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுமதியளித்தது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு நாளில் செய்முறை தேர்வுகள் – CEO ஆலோசனை!!!

இரண்டாம் அலை:

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலையைப் பொறுத்து தளர்வுகளை அறிவித்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிலகங்கள் மெல்ல செயல்படத் தொடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியது. இந்நிலையில் 2021 மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 10 நாட்களில் திடீரென்று பாதிப்பு உச்சத்தை எட்டியது.

TN Job “FB  Group” Join Now

ஊரடங்கு உத்தரவு:

கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் காரணத்தால் மாநிலங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹரியானா மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here