மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா? ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா? ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் 2022 ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் இறுதி பட்டியலில் வெளியிட்ட 590 வீரர்களில் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மும்பை அணியால் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டதன் காரணம் வெளியாகியுள்ளது.

IPL மெகா ஏலம்:

IPL தொடரில் போட்டியிடும் பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், மீதமுள்ள வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,214 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது 590 வீரர்கள் கொண்ட இறுதி பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது

மத்திய அரசின் ஊழியர்களுக்கு DA உயர்வு ஆண்டுக்கு ரூ.90,000 – 7வது ஊதியக்குழு அறிக்கை!

2021 ஆம் ஆண்டு BCCI ஒரு அணி தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி 5 முறை IPL கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸும் நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது. ரோஹித் சர்மா 16 கோடிக்கும் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கெய்ரோன் பொல்லார்ட் ஆகியோர் முறையே 12 கோடி, 8 கோடி மற்றும் 6 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மும்பை அணி ஆள் ரவுண்டர் பாண்டியா விடுவிக்கப்பட்டார் . இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 48 கோடி ரூபாய்க்கு மீதம் உள்ளது.

இலவச கேஸ் சிலிண்டர், பேருந்து பயணம் & இருசக்கர வாகனம் – பாஜகவின் சூப்பர் தேர்தல் அறிக்கை!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பாண்டியா கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டதை அடுத்து லக்னோ அணி அவரை ஏலம் எடுத்து கேப்டனாக நியமித்தது. தற்போது மும்பை அணியில் இருந்து பாண்டியா விடுவிக்கப்பட்டதன் காரணம் வெளியாகியுள்ளது. மும்பை அணியை வழி நடத்துவதாக ஹர்திக் பாண்டியா கூறியதாகவும் அதற்கு மும்பை அணி எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த தரப்பிலும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here