அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ‘மேரா ரேஷன்’ செயலியின் முக்கிய அம்சங்கள்!
நாட்டின் வாழும் மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாறும் பொழுது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டத்தின் முக்கிய பகுதியாக ‘மேரா ரேஷன்’ செயலி உள்ளது.
மேரா ரேஷன் செயலி:
நாட்டில் ‘ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு’ முறையை எளிதாக்கும் வகையில், அருகிலுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மக்கள் எளிமையாக யனடைவதற்காக ‘மேரா ரேஷன்’ மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக புதிய பகுதிகளுக்கு செல்லும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) பயனாளிகள், புலம்பெயர்ந்த பயனாளிகள், FPS டீலர்கள் ‘ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தொடர்பான பல்வேறு சேவைகளை எளிதாக்குவதற்காக NIC உடன் இணைந்து இந்த செயலி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ் – விரைவில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை!
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு, லம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு முறை மூலம் தங்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து முன்னதாக பொது விநியோகத் துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே, 2019 ஆகஸ்டில் 4 மாநிலங்களில் தொடங்கப்பட்ட ONORC அமைப்பு, மிகக் குறுகிய காலத்தில் விரைவாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது . தற்போது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீதமுள்ள அஸ்ஸாம், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும் இதற்கான பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 69 கோடி NFSA பயனாளி இதில் சேர்க்கப்ட்டுள்ளனர். ONORC இன் கீழ் மாதாந்திர சராசரியாக சுமார் 1.5 முதல் 1.6 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்படுவதாகவும் பாண்டே தெரிவித்தார். புலம்பெயர்ந்த பயனாளிகள் தங்கள் இடம்பெயர்வு விவரங்களை விண்ணப்பத்தின் மூலம் பதிவு செய்யலாம். ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு முறை சீர்திருத்தத்தை அமல் படுத்தியுள்ள மாநிலங்கள், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.25 சதவீதம் கூடுதல் கடன் வாங்க தகுதியுடையவை. இந்த மாநிலங்களுக்கு செலவினத் துறை மூலம் ₹37,600 கோடி கூடுதல் கடன் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அம்சங்கள்:
- பயனாளிகள் அருகில் உள்ள நியாய விலைக் கடையைக் கண்டறிந்து கொள்ளலாம்.
- பயனாளிகள் அவர்களின் விவரங்களை எளிதாக சரிபார்க்கலாம்.
- உணவு தானிய உரிமைகளை அறிந்து கொள்ளலாம்.
- சமீபத்திய பரிவர்த்தனைகள் தெரிந்து கொள்ள முடியும்.
- ஆதார் விதைப்பு நிலையை சரி பார்த்துக் கொள்ள முடியும்.