1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூன் 26 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஜூன் 26 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஜூன் 26 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூன் 26 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!

நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு கோடை விடுமுறையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை நீட்டிப்பு:

நாடு முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதன் தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கட்டாயம் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் தேர்வுகளும் நடத்தப்பட்டு , முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் பகல் நேரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூட வர முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஜூன் 26-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு?

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மணீஷ் ஜெயின் அறிவித்துள்ளார். கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக, வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட மாட்டாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here