தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – கிசான் அட்டை வழங்க சிறப்பு முகாம்!

0
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் - கிசான் அட்டை வழங்க சிறப்பு முகாம்!
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் - கிசான் அட்டை வழங்க சிறப்பு முகாம்!
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – கிசான் அட்டை வழங்க சிறப்பு முகாம்!

நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரதமர் கிசான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் விவசாய கடன் அட்டை வழங்கிட சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. மேலும் விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விவசாய கடன் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளில் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த தொகை ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். மேலும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு என அனைத்துக்கும் கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணை வெளியிடப்பட்டுள்ளது. 11வது தவணை குறித்த அப்டேட்டுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தவணை பேங்க் அக்கவுண்டுக்கு வந்துவிடும். ஆனால் தற்போது வரை 11வது தவணை வந்து சேரவில்லை. இதனை எதிர்நோக்கி விவசாயிகள் உள்ளனர். இந்த திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும். இந்நிலையில் ஏப்ரல் 24 முதல் முதல் மே1 வரை கிசான் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தமிழகத்தில் நடைப்பெறுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் விவசாய கடன் அட்டை வழங்கிட சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இதில் பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்கப்படும் .

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

1. ஆதார் அட்டை உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் எடுத்துச் சென்று உள்ளூரில் இருக்கும் வேளாண்மை அலுவலகத்தில், கிசான் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

2. இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும் www.pmkisan என்ற தளத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். PM Kisan App வழியாகவும் உங்கள் விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here