தமிழக ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சிறப்பு முகாம் ஏற்பாடு!

0
தமிழக ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சிறப்பு முகாம் ஏற்பாடு!
தமிழக ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சிறப்பு முகாம் ஏற்பாடு!
தமிழக ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சிறப்பு முகாம் ஏற்பாடு!

தமிழகத்தில் ஆதார் அட்டைதாரர்களுக்கு உதவும் வகையில் ஆதார் திருத்த முகாம் அவ்வப்போது நடைபெறும். ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்பவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம். அந்த வகையில் தற்போது சிறப்பு முகாம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

சிறப்பு முகாம்:

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைகள், சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல் போன்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. இவ்வாறு அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும் ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, அதில் உள்ள பெயர், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை சரியாக வைத்து கொள்வது அவசியம். தற்போது ஆதாரில் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே விவரங்களை மாற்றலாம். இதற்கு உரிய ஆவணங்கள் வேண்டியது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

ஆனால், கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில் மட்டும் தான் மாற்ற முடியும். அதே போல புதிய ஆதார் கார்டு பெற நினைப்பவர்களும் ஆதார் மையம் செல்ல வேண்டும். ஆதார் மையத்தை தொடர்ந்து அஞ்சலகங்களிலும் புதிய ஆதார் எடுத்தல், விவரங்களை மாற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படும். பெரும்பாலும் மக்கள் ஆதாரில் அதிகம் மொபைல் எண் மாற்றுவார்கள். அதனை தொடர்ந்து இடம் மாற்றம் காரணமாக முகவரியை அடிக்கடி மாற்றம் செய்ய முற்படுவார்கள். இவ்வாறு ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அவ்வவ்போது ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தில் Vice-Chancellor ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை திருத்த முகாம் நடைபெற உள்ளது. அம்மாவட்டத்தில் கே.வி.குப்பம் தாலுகா கீழ் ஆலத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இ.சேவை மையக் கட்டிடத்தில் கிராம மக்களுக்கான ஆதார் அட்டை திருத்த முகாம் இன்று தொடங்கியுள்ளது. இந்த முகாமில் புதிய பதிவுகள், கைபேசி எண் சேர்த்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. முகாமானது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள ஆதார் அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதாரில் விவரங்களை மாற்றி அப்டேட்டாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!