Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு குறித்த விவரம் வெளியீடு!

0
Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - சம்பள உயர்வு குறித்த விவரம் வெளியீடு!
Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - சம்பள உயர்வு குறித்த விவரம் வெளியீடு!
Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு குறித்த விவரம் வெளியீடு!

Wipro, Infosys, TCS ஆகிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், எவ்வளவு சம்பள உயர்வு வழங்கப்படும் என்பது தொடர்பான அனைத்து விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் அவ்வப்போது ஊழியர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனிடையே, அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பல ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கூகுள் நிறுவனமும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் திட்டமிட்டு கொண்டிருக்கும் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் பிற சலுகைகள் குறித்த விளக்கத்தை பார்க்கலாம். அதாவது, விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என விப்ரோ நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ஜின் அழுத்தம் இருப்பதன் காரணமாக எவ்வளவு சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கிறது என்பது குறித்து தற்போது வரைக்கும் முடிவெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘இந்த’ 2 மாவட்டங்களுக்கு செப்.08 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருந்தாலும் புதிய ஊழியர்களை பணியமர்த்தவும், சம்பள உயர்வு வழங்குவது குறித்தும் சிந்தித்து வருகிறது. ஆனால், இதுவரைக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான அறிக்கையை வெளியிடவில்லை. இதனையடுத்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது முதல் காலாண்டில் 19.7 சதவிகித அட்ரிஷன் விகிதத்தை பதிவு செய்துள்ளது. இருப்பினும், 5 முதல் 8 சதவீதம் வரைக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!