IBM, Infosys நிறுவனங்கள் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – குஷியில் ஐடி ஊழியர்கள்!!

0
IBM, Infosys நிறுவனங்கள் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் - குஷியில் ஐடி ஊழியர்கள்!!
IBM, Infosys நிறுவனங்கள் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் - குஷியில் ஐடி ஊழியர்கள்!!
IBM, Infosys நிறுவனங்கள் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – குஷியில் ஐடி ஊழியர்கள்!!

உலகம் முழுவதிலும் ஐடி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியை அடைந்து வருகின்றது. மறுபுறம் பல்வேறு பிரச்சனைகளையும் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் IBM, Infosys நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளன. இதனால் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் ஐடி ஊழியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

வர்த்தக விரிவாக்கம்:

உலக முழுவதும் கொரோனா பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும் ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணி செய்யுமாறு அறிவுறுத்தின. அத்துடன் ஊழியர்களை தங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வந்தன. அதனால் ஐடி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. இதையடுத்து தற்போது பல ஐடி நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகின்றன.

பொதுத்துறை வங்கிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான திட்டங்கள் – மத்திய நிதியமைச்சர் முக்கிய தகவல்!

அந்த வகையில் IBM, Infosys ஆகிய நிறுவனங்கள் முறையே இந்தியா மற்றும் கனடாவில் புதிய அலுவலகம் ஒன்றை தொடங்கியுள்ளன. அதாவது உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான IBM ஆனது தனது புதிய அலுவலகத்தை கேரளாவில் தொடங்கியுள்ளது. அதன்படி கேரளாவில் காக்கநாட் பகுதியில் இருக்கும் பிரிகேட் வேர்ல்ட் டிரேட் சென்டர் இன்போபார்க்கில் குளோபல் இன்னோவேஷன் சென்டரை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த புதிய அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் பிரிவுகளில் அனைத்து விதமான இன்ஜினியரிங், டிசைன், டெவலப்மென்ட் உள்ளிட்ட பணிகள் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதே போல், Infosys நிறுவனமும் புதிய டிஜிட்டல் சென்டர் ஒன்றை திறந்து வைத்துள்ளது. இந்நிறுவனம் கனடா நாட்டின் முக்கிய நகரமான Calgary பகுதியில் புதிய டிஜிட்டல் சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து 2024-ம் ஆண்டுக்குள் இன்போசிஸ் தனது கனடா ஊழியர்களை 8000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக கனடா நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் Infosys நிறுவனத்தின் வளர்ச்சியும் உயரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!