தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான பொருட்கள்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தரமான பொருட்கள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தரமான பொருட்கள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான பொருட்கள்!

தமிழக அரசின் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் மக்கள் அது குறித்து புகார்களை அளிக்கலாம் என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிக்கை:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று ரேஷன் பொருட்களின் தரம் குறித்த அறிவிப்பு. சம்பந்தப்பட்ட அமைச்சர் அரசு கொள்முதல் செய்யும் நிலையங்களில், அரவை ஆலைகளிலும் நேரடியாக ஆய்வுகளை செய்து ரேஷன் பொருட்கள் அனைத்தும் தரமானதாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். தற்போது, தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும் அவற்றிலும் தரம் குறைந்த பொருட்கள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டது.

TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – தேர்வு தேதி இன்று அறிவிப்பு!

இதனால் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் பிப்ரவரி 17ம் தேதியான நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து கூட்டுறவு சங்கத்தினரும் கடைபிடிக்க வேண்டிய மற்றும் சோதிக்கிய வேண்டிய விதிமுறைகளை குறித்து தெரிவித்துள்ளார்.

அறிக்கை:

  • நியாய விலை கடைகள் சரியான நேரத்தில் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நியாய விலை கடைகளில் சரியான கையிருப்பு, பராமரிப்பு, கணக்குகளை பராமரித்தல் மற்றும் விற்பனை தொகை நாள்தோறும் தலைமையகத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழித்தட அட்டவணையின் படி எந்த விலகலும் இல்லாமல் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
  • கூட்டுறவு நியாயவிலை கடைகளுக்கு நகர்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொதுவிநியோக திட்ட நகர்வு வாகனங்கள் மாதந்தோறும் ரேண்டமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரக்கு ஏற்றப்படுவதற்கு முன்னும் பின்னும் எலக்ட்ரானிக் எடை மேடைகளில் எடையிடப்பட்ட வேண்டும். அனைத்து எடை ரசீதுகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் வழங்கப்படும் வழங்கல் ஆணைகள் நகர்வு பணியாளரால் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விதி) ஒரு மாதத்தில் குறைந்தது 25% வழங்கல் ஆணைகளை சரிபார்க்க வேண்டும்.

பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

  • நியாய விலை கடையில் நல்ல தரமான பொருட்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பொருட்கள் தரமற்றதாக கண்டறியப்பட்டால் அவற்றை டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு திரும்ப அனுப்பி மாற்றி பெறுவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • அனைத்து பொது விநியோக திட்ட நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இணக்கமான முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாட்டு பொருள்கள் POS Bill லிருந்து எந்த விலகலும் இன்றி விநியோகிக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.
  • எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் ஒரு விற்பனையாளர் இரண்டு முழு நேர நியாய விலை கடைகளுக்கு மேல் நிர்வகிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் போதுமான பணியாளர்களை கூட்டுறவு சங்கங்களில் இருந்து பரவல் முறையில் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • இது போன்ற விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!