விஜய் டிவி ‘அரண்மனை கிளி’ ஜானு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புது சீரியலில் என்ட்ரி!

0
விஜய் டிவி 'அரண்மனை கிளி' ஜானு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புது சீரியலில் என்ட்ரி!
விஜய் டிவி 'அரண்மனை கிளி' ஜானு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புது சீரியலில் என்ட்ரி!
விஜய் டிவி ‘அரண்மனை கிளி’ ஜானு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புது சீரியலில் என்ட்ரி!

அரண்மனை கிளி சீரியலில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோனிஷா தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக கலர்ஸ் தொலைகாட்சியில் ஒரு புதிய சீரியலில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

பச்சக்கிளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொலைக்காட்சி சீரியல்களில் அறிமுகமாகும் நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே கூடிய சீக்கிரமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர். மேலும், சீரியல்களில் அறிமுகமான ஓரிரு மாதங்களிலேயே திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துவிடுகிறது. அந்த அளவுக்கு சீரியல்களில் அறிமுகமான சில மாதங்களிலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிடுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அரண்மனை கிளி என்கிற சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் மோனிஷா.

இந்த அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சியின் மருமகளாக ஜானு என்கிற கதாபாத்திரத்தில் கண்ணு தெரியாத பெண்ணாக நடித்து கொண்டிருந்தார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் கொரோனாவின் காரணமாக சீரியலை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிவிட்டது. இதனால் மோனிஷாவை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தனர். மீண்டும் அரண்மனை கிளி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுமா எனவும், அடுத்த சீரியலில் எப்போது இணைவீர்கள் எனவும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டபடி இருந்தனர். நல்ல கதை கொண்ட சீரியல் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என மோனிஷா கூறியிருந்தார்.

பின்னர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் ரக்ஷிதாவுக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமானார். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரும் கூடிய விரைவில் முடிவடைய இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்த நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்காக கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள பச்சக்கிளி என்னும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சீரியல் ஜூலை 4 முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!