
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த வார ப்ரோமோ ரிலீஸ்! குடும்பத்துடன் கொண்டாட்டம்!
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் Cook With Family Round நடைபெற இருக்கிறது. குடும்பத்தினருடன் இவர்கள் அடிக்கும் அரட்டையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது கண்டிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர். மேலும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் இந்த கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த கோமாளிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. இந்த கோமாளிகள் செய்யும் சேட்டைகளை கண்டு ரசிக்கவே ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அனைத்து வாரமும் தவறாது பார்த்து விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிகர்கள் சமூக வலைப்பக்கங்களில் வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்.
ஆனாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்றே தனியாக ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் Cook With Family என்னும் தலைப்புடன் போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும், கோமாளிகளுக்கு advantage task கொடுக்கப்படுகிறது. இந்த வாரம் விலங்குகள் அமைப்பில் தோசை சுட வேண்டும். இந்த டாஸ்கில் ஜெயிப்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூடுதலாகவே Fun காத்திருக்கிறது.