விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் புதிய சீரியலில் என்ட்ரி!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் புதிய சீரியலில் என்ட்ரி!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் புதிய சீரியலில் என்ட்ரி!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் புதிய சீரியலில் என்ட்ரி!

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி தற்போது ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது அந்த தொடர் ஜீ தமிழில் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீரியலில் என்ட்ரி:

விஜய் தொலைக்காட்சி சீரியல் மூலமாக பலருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அகிலன் பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். பாரதி கண்ணம்மா தொடரில் விலகிய பிறகு வீரமே வாகை சூடும் என்கிற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போதும் எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருக்கிறார். அகிலனை தொடர்ந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினியும் பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.

ஆனால், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். ரோஷினியை தொடர்ந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணியும் விலகினார். பாரதி கண்ணம்மா சீரியல் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்காத காரணத்தினால் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் அமுதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த சீரியலின் ப்ரோமோ கூட சமீபத்தில் வெளியானது. ப்ரோமோ வெளியாகி பல நாட்கள் ஆகியும் சீரியல் ஒளிபரப்பாகாத காரணத்தினால் சீரியலை பாதியிலேயே முடித்துவிட்டதாக பல வதந்திகள் வெளியானது. இந்நிலையில், கண்மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் அமுதாவும் என்கிற சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழில் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்மணி இந்த செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here