ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – 12 ஆண்டுகளுக்குப் பின் சேவைகள்! மே 27 முதல் தொடக்கம்!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - 12 ஆண்டுகளுக்குப் பின் சேவைகள்! மே 27 முதல் தொடக்கம்!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - 12 ஆண்டுகளுக்குப் பின் சேவைகள்! மே 27 முதல் தொடக்கம்!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – 12 ஆண்டுகளுக்குப் பின் சேவைகள்! மே 27 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. தற்போது இது முடிவடைந்துள்ள நிலையில் பலமுறை ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டமும் நடைபெற்றது. தற்போது மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு

தமிழகத்தில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்வதை விருப்பம் கொள்கின்றனர். மேலும் ரயிலில் மற்ற போக்குவரத்தை விட மலிவான விலையில் பயணச்சீட்டு கிடைப்பதால் சாமானிய மக்களும் இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் தொற்று பரவல் குறைந்த பிறகு ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து ரயில்களும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. முதலில் இந்த பணிகள் மெதுவாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு 90.4 கி.மீ, மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து மதுரையிலிருந்து தேனி வரை பலமுறை ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் 3 பெட்டிகளுடன் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை (WFH) நீட்டிப்பு – கொரோனா பரவல் எதிரொலி! அரசு அதிரடி முடிவு!

அதன்பின் எப்போது மதுரை – தேனி இடையே ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். இதையடுத்து இது குறித்து ரயில்வே நிர்வாகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 27ம் தேதி முதல் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் என்றும் தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6.15 க்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!