ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!

0
ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் - IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் - IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!

இந்தியாவில் ரயில் பயணிகளின் வசதிக்காக ஐஆர்சிடிசி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பயணிகளுக்கான புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

QR CODE வசதி:

இந்தியாவில் மக்கள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்ததை அடுத்து ரயில்கள் மீண்டும் வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரயில்வேத்துறை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பதிவில்லா ரயில்களையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஐஆர்சிடிசி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் உங்களின் போட்டிங் பாயின்டையும் மாற்றி கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

அத்துடன் எதிர்பாராத சூழலில் நீங்கள் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால் உங்களின் பணம் திரும்பி செலுத்தப்படும். அதனை தொடர்ந்து பயணிக்கும் போது பயணிகளுக்கு நேரும் குறைகளை சரி செய்ய ஹெல்ப்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையம் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் தகவல், பார்சல் விசாரணை, பொதுத் தகவல் போன்றவற்றை பெறலாம். அத்துடன் தற்போது உணவுகளை வாங்கும் போது க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிகமாக ஊக்கப்படுத்துகிறது.

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை. அதனால் தற்போது ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் படி இனி ஐஆர்சிடிசி வழங்கும் மெனு கார்டிலேயே க்யூ ஆர் கோட் அச்சிடப்பட்டிருக்கும். அதைப் பயன்படுத்தி பயணிகளே தங்கள் செல்போன் மூலம் UPI பயன்படுத்தி பணம் செலுத்தலாம். மேலும் ரயில் பயணிகள் தங்கள் உணவுகளை ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைனில் புக் செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here