ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி Instant ஆக டிக்கெட் முன்பதிவு!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இனி Instant ஆக டிக்கெட் முன்பதிவு!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இனி Instant ஆக டிக்கெட் முன்பதிவு!ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இனி Instant ஆக டிக்கெட் முன்பதிவு!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி Instant ஆக டிக்கெட் முன்பதிவு!

இந்திய ரயில்வேத்துறை பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது IRCTC புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் இனி இன்ஸ்டன்ட்டாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் புக்கிங்:

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பிறகு தற்போது தான் ரயில்கள் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்பதிவில்லா பெட்டிகளும் இயக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் IRCTC பல புதிய திட்டங்களை ரயில் பயணிகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ரயிலில் உணவு பொருட்கள் வாங்கும் போது பணம் செலுத்த QR கோட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் IRCTC பயணத்தின் போது ரயிலில் காலி பெர்த் அல்லது இருக்கைகள் பற்றி அறிந்தால் அவற்றை உடனடியாக இன்ஸ்டன்ட் புக்கிங் செய்துகொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

நாம் ரயிலில் இருக்கைகளில் அமர்ந்து தாராளமாக பயணம் செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே புக்கிங் செய்ய வேண்டும். இல்லையெனில் கடைசி நேரத்தில் தாக்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு நாம் டிக்கெட் புக் செய்ய முயலும் போது சில நேரங்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. பயணிகள் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுகிறது. இது ரயில் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தவிர்க்கவே ரயில் விவரங்கள் மற்றும் அந்தந்த வழித்தடத்தின் வழியாகச் செல்லும் ரயிலில் உள்ள காலியான பெர்த்கள் பற்றிய செய்தியை IRCTC பயனர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு – பதிவு எண்ணை மறந்துவிட்டீர்களா? இதோ எளிய வழிமுறைகள்

இதுவரை ரயிலில் எந்த இருக்கை இறுதி நேரத்தில் காலியாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாத பயணிகளுக்கு இந்த வசதி பெறும் உதவியாக இருக்கும். தற்போது IRCTC பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை இனி இன்ஸ்டன்ட் புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த வசதியை பெற விரும்புபவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியைப் பெற வேண்டும். அப்போது தான் ரயிலில் காலி பெர்த்களை அறிய முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!