தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் வேலை சுமையை குறைக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் பணி சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிச்சுமை:

தமிழக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு சேர்த்து வருகை பதிவேடு, பாடத்திட்டம் எழுதுதல், அலுவக பணி பதிவேடுகளை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் பள்ளி முடிந்தும் ஆசிரியர்கள் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் ஓய்வின்றி வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அண்மையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் பாடம் நடத்துகிறோம் பிறகு வீட்டிற்கு சென்று ஆவணங்களை பராமரிக்கும் பணி சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு கவலை தெரிவித்தார்.

அதனால் ஆசிரியர்களின் பணியை குறைக்கும் வகையில் பள்ளி சார்ந்த அனைத்து ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக பராமரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் மையமாகி விட்டது. அதனால் ஆன்லைன் வாயிலாக சுலபமாக நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளை போல பள்ளிக்கல்வித்துறையிலும் பணி பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தமாக 81 வகை ஆவணங்களை இணையதளம் வாயிலாக பராமரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை – திருப்பதி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம்? பயணிகள் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

மேலும் தேவையற்ற ஆவண வகைகள் நீக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 4 முதல் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடுகளை மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டத்தை பராமரிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here