தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் புதிய ரேஷன் கார்டை தருவதற்கு அதிகாரிகள் கால தாமதம் செய்கின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவது குறைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ரேஷன் கார்டுக்கு தற்போது நாள்தோறும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் முன்னதாக புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டு இல்லாமல் உணவு பொருட்களை பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூன் 23) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம்!

ஆனால் இந்த உத்தரவுப்படி தற்போது 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதனால் தற்போது விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அஞ்சல் மூலமாக புதிய ரேஷன் கார்டு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் நகல் கார்டுக்கு 20 ரூபாய், அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் ரூ.45 வரை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here